இந்திய தண்டனை சட்டம் பிரிவு 99 (IPC Section 99 in Tamil)


விளக்கம்

ஒரு பொது ஊழியர் நல்லெண்ணத்துடன் செய்யும் அல்லது செய்ய முயற்ச செய்யும் காரியத்தை எதித்து தற்காப்புரிமையை பிரயோகிக்க முடியாது. அப்படி தற்காப்பு உரிமையை பிரயோகிக்க வேண்டுமென்றால், அந்த பொது ஊழியரின் செயலால் மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படக்கூடும் என்ற நியாமான உணர்வு எழவேண்டும். போடு ஊழியரின் செய்கை சட்டப்படி முறையற்றதாகக் கூட இருக்கலாம். இருப்பினும் அவரை எதிர்க்கத் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தக்கூடாது. அதே போல் நல்லெண்ணத்துடன் செயல்படும், ஒருவரின் ஆணையின் கீழ் நடைபெறும் காரியத்தையும் எதிர்க்க முடியாது. அந்தக் காரியம் சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டதாக இருப்பினும் எதிர்க்க முடியாது. அப்படித் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி எதிர்க்க வேண்டுமென்றால் அந்தச் செயலின் மூலம் மரணம் அல்லது கொடுங்காயம் சம்பவிக்கக் கூடும் என்ற நியாய பூர்வமான அச்சம் ஏற்பட வேண்டும். அதே போன்று அந்தச் செயலை எதிர்த்து அரசாங்க அதிகாரிகளின் உதவியையும் பாதுகாப்பையும் நாடிப்பெறுவதற்கான அவகாசம் இருக்கும் போதும் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தல் ஆகாது. தற்காப்பு உரிமையை எல்லை மீறிப் பயன்படுத்தக்கூடாது. தற்காப்புக்ககாகத் தாக்க நேரிட்டால் அளவுக்கு மீறித் தீங்கு உண்டாக்கக் கூடாது. தன்னைத் காத்துக் கொள்ள எந்த அளவுக்குத் தாக்குதல் நடத்தல் வேண்டுமோ அதற்கு மேல் சென்று தாக்குதல் நடத்தக் கூடாது. Explanation: 1. காரியத்தை செய்பவர் பொது ஊழியர் என்று தெரியாமல் தற்காப்பு உரிமையை பயன்படுத்தி இருந்தால் அது தவறாகாது. 2. அதே போல பொது ஊழியரின் ஆணைப்படி ஒரு காரியம் செய்யப்படுகிறது என்பதை அறியாமல் தற்காப்பு உரிமையை பயன்படுத்தினால் அது குற்றமாகாது.
 
எச்செயலுகளுக்கு எதிராக தனிநபர் தற்காப்பு உரிமை இல்லையோ, அச்செயல்கள்
ஒரு பொதுப் பணியாளரால், அவரது பணி நிமித்தத்தின்கீழ் நன்நம்பிக்கையில் செயல்படும்போது, ஒரு செயல் சட்டத்தால் கண்டிப்பாக நியாப்படுத்த முடியாததாக இருந்தாலும்கூட, செய்யப்பட்ட அல்லது செய்ய முயற்சிக்கப்பட்ட எச்செயல் மரணம் அல்லது கொடுங்காயத்தின் எதிர்ப்பார்ப்பு அச்சத்தை நியாயாமாக ஏற்படுத்தவில்லையோ, அச் செயலுக்கெதிராக, தனி நபர் தற்காப்பு உரிமை கிடையாது. ஒரு பொதுப் பணியாளரின் பணிநிமித்ததின்கீழ் அவரது கட்டளையினால் நன்னம்பிகையில் செயல்படும்போது, அக்கட்டளை சட்டத்தால் கண்டிப்பாக நியாயப்படுத்த முடியாததாக இருந்தாலும்கூட, செய்யப்பட்ட, அல்லது செய்ய முயற்சிக்கப்பட்ட எச்செயல் மரணம் அல்லது கொடுங்காயத்தின் எதிர்பார்ப்பு அச்சத்தை நியாயமாக ஏற்படுத்தவில்லையோ, அச்செயலுக்கெதிராக, தனி நபர் தற்காப்பு உரிமை கிடையாது. எந்த நேர்வுகளில், பொது அதிகார அமைப்பினரிடம் பாதுகாப்பு உதவிகோருவதற்கு நேரமிருக்கிறதோ, அந்த நேர்வுகளில் தனிநபர் தற்காப்பு உரிமை கிடையாது. எந்த அளவிற்கு உரிமையைப் பயன்படுத்தலாம்:- தற்காப்பு நோக்கத்திற்காக, தீங்கை விளைவிப்பதற்கு அவசியமானதற்கும் கூடுதலான அதை விளைவிக்கும் எந்தஒரு நேர்விற்கும், தனிநபர் தற்காப்புரிமை நீட்டிக்கப்படாது. விளக்கம் 1:- ஒரு பொதுப்பணியாளரால், அத்தகைய பொதுப் பணியாளர் என்ற முறையில் செய்யப்பட்ட, அல்லது செய்ய முயற்சிக்கப்பட்ட ஒரு செயலுக்கெதிராக, அச்செயலை செய்கின்ற அந்நபர் அத்தகைய பொதுப்பணியாளர் என்று அவருக்குத் தெரிந்தால், அல்லது நம்புவதற்குக் காரணமிருந்தால் தவிர, ஒருநபர் தனிநபர் தற்காப்பு உரிமையை இழக்கமாட்டார். விளக்கம் 2:- ஒரு பொதுப்பணியாளரின் கட்டளையினால் செய்யப்பட்ட, அல்லது செய்ய முயற்சிக்கப்பட்ட ஒரு செயலுக்கெதிராக, அச்செயலை செய்கின்ற அந்நபருக்கு அத்தகைய கட்டளையினால் செயல்படுவதாகத் தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு காரணமிருந்தால் தவிர, அல்லது எந்த அதிகாரத்தின்கீழ் அவர் செயல்படுகிறாரோ, அந்த அதிகாரத்தை அத்தகைய நபர் தெரிவித்தால் தவிர, அல்லது அவர் எழுத்தலான அதிகாரத்தைக் கொண்டிருந்தால், கோரப்பட்டால், அத்தகைய அதிகாரத்தை அவர் காண்பித்தால் தவிர, ஒரு தனிநபர் தற்காப்பு உரிமையை இழக்கமாட்டார்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 99 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்