இந்திய தண்டனை சட்டம் பிரிவு 96 (IPC Section 96 in Tamil)


விளக்கம்

சில நேரங்களில் நம்மை பிறரிடமிருந்து காப்பாற்றி கொள்வதற்காக சில காரியங்களை செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் பிறருக்கு தீங்கு கூட ஏற்படலாம். அந்த தீங்கு சொத்துக்கு நஷ்டம் உண்டாக்குவதற்காகவோ உடலுக்கு காயம் விளைவிப்பதற்காகவோ அல்லது தவிர்க்க முடியாத நேரத்தில் மரணம் சம்பவிக்க கூடியதாகவோ கூட அமையலாம். ஆனால் அத்தகைய செயலை தண்டனைக்குரிய குற்றமாக கருத முடியாது. ஆனால் அதற்கும் ஒரு வரையறை உண்டு. நம்மை தேடி கொண்டு ஒருவன் தாக்க வரும்போது அவன் கையிலுள்ள தடியை பிடுங்க முயற்சி செய்யலாம். அவனை அப்போது தடியால் தாக்கி அவனுடைய கையிலுள்ள தடியை பிடுங்க செய்யலாம். இது குற்றமாகாது. ஏனனில் நம்மை காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு செய்கிறோம். ஆகவே அந்த செயல் குற்றமாகாது. ஆனால் தற்காப்பு என்ற பெயரால் தடிகொண்டு தாக்க வருபவனை எதிர்த்து அரிவாளால் தாக்குவது சரியில்லை. அவசியமும் அல்ல. ஓர் எதிரியிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் ஏற்படும் பொழுது நமக்கு வரும் ஆபத்தை தவிர்க்க எந்த அளவுக்கு வன்முறையை கையாள வேண்டுமோ அந்த அளவுக்கு மேல் அத்துமீறி கையாளாக கூடாது. அப்படி அது மீறும் பொது நாம் செய்யும் காரியம் தண்டனைக்குரிய குற்றமாகிறது. நம்மால் பொறுத்துக்க கொள்ள முடியாத அளவுக்கு கொடுமையான துன்பத்தை எதிர் செய்ய முற்படும்பொழுது அவன் கொலை செய்து விட்டாலும் குற்றமாகாது. தற்காப்பின் நிமித்தம் செய்யப்பட்ட காரியமாகவே அந்த கொலை கருதப்படும். ஏனெனில் எதிரி, நமக்கு இழைக்கும் கொடுமையால் பொங்கி எழுந்து உணர்ச்சி வசப்பட்ட சூழ்நிலையில் எதிரியை திருப்பி தாக்க நேரிடலாம். அத்தகைய தாக்குதலின் விளைவாக காயமடைந்த எதிரி மரணமடைய கூடும். அந்த மரணம் தற்காப்பின் விளைவாக நேரிட்டது என்றால், அதற்கு தண்டனை இல்லை. ஏனெனில் 96 -வது பிரிவின்படி தற்காப்புக்கு என்று செய்யப்படும் எந்த காரியமும் தண்டனைக்குரிய குற்றமாகாது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 96 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்