இந்திய தண்டனை சட்டம் பிரிவு 92 (IPC Section 92 in Tamil)


விளக்கம்

ஒரு நபர் சம்மதத்தைத் தெரிவிக்க முடியாத அத்தகைய சூழ்நிலைகளில் இருந்தால் அல்லது அந்நபர் சம்மதத்தைத்தெரிவிக்க இயலாதவராக இருந்தால் மற்றும் எந்தவொரு பிடிற நபர் அவரின் சட்டப்பூர்வமான பொறுப்பைக் கொண்டிருக்கிறாரோ, அவரின் நலனுக்காக அச்செயல் செய்யப்பட அவரிடமிருந்து சாpயான நேரத்தில் சம்மதத்தைப் பெறுவதற்கு முடிகிற எவரும் இல்லாதபோது அவரின் சம்மதமின்றியும் கூட அவரின் நலனுக்காக நன்னம்பிக்கையில் செய்யப்பட்ட செயல் எதுவும் அந்நபருக்கு ஏதாவதொரு தீங்கு விளைவிக்கப்படலாம் என்ற காரணத்தாலேயே ஒருகுற்றமாகாது. இருப்பினும் விலக்குகள் முதாலாவது - உள்நோக்கத்தில் விளைவிக்கப்படும் மரணத்திற்கு அல்லது மரணத்தை விளைவிக்கும் முயற்சிக்கு இந்த விதிவிலக்கு நீடிக்கப்படாது. இரண்டாவதாக - மரணம் அல்லது கொடுங்காயத்தைத் தடுப்பதற்கு அல்லது ஏதாவதொரு கொடிய நோய் அல்லது உடல் ஊனத்தைக் குணமாக்குவதற்கு இல்லாமல் பிற ஏதாவதொரு நோக்கத்திற்காக அதைச் செய்யும் நபர் மரணத்தை அநேகமாக விளைவிக்கும் என தெரிந்தே செய்யும் ஏதாவதொன்றுக்கு இந்த விதிவிலக்கு நீட்டிக்கப்படாது மூன்றாவதாக - மரணம் அல்லது காயத்தைத் தடுப்பதை தவிடிர பிற ஏதாவதொரு நோக்கத்திற்காக தன்னிச்சiயாகக் காயம் விளைவிப்பதற்கு அல்லது காயத்தை விளைவிக்க முயற்சிப்பதற்கு இந்த விதிவலக்கு நீட்டிக்கடப்டாது நான்கவதாக - எந்த குற்றத்தைப் புரிவதற்கு இந்த விதிவிலக்கு நீட்டிக்கபடக்குடாதோ அந்த ஏதாவதொரு குற்றத்தின் தூண்டுதலுக்கு இந்த விதிவிலக்கு நீட்டிக்கப்படாது. எடுத்துகாட்டுகள் (a) Z என்பவர் அவரின் குதிரையிலிருந்து தூக்கி எறியப்பட்டு மற்றும் உணர்வின்றி இருக்கிறார். Zன் மண்டை ஓட்டில் துளையிடடுச் செய்யப்படும் அறுவை சிகிச்சை அவசியம் என A என்ற ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர் கண்டறிகிறார். Zஇன் மரணத்திற்கு உள் நோக்கமின்றி ஆனால் நன்னம்பிக்கையில் Zஇன் நலனுக்காக Z என்ன ஏதுவென்று புரிந்துகொள்ளும் ஆற்லைத் திருமப்ப பெறுவதற்கு முன்னரே A துளையிட்டு சிகிச்சை செய்கிறார். A எக்குற்றத்தையும் புரிந்திருக்கவில்லை. (b) Z என்பவர் ஒரு புலியினால் கவ்விக்கொண்ட செல்லப்படுகிறார். A என்பவர் சுடுவதானது Zஐ அநேகமாக கொல்லலாம் என்று தெரிந்தே, ஆனால் Zஐ கொல்வதற்கு உள்நோக்கமின்றி மற்றும் Zஇன் துப்பாக்கிக் குண்டு Zஇன் உயிரைப் பறிக்கும் ஒரு காயத்தை ஏற்படுத்துகிறது. A எக்குற்றத்தையும் புரிந்திருக்கவில்லை. (c) ஒரு அறுவை சிகிச்சையை உடனடியாகச் செய்தால் தவிர அநேகமாக உயிருக்கு ஆபத்தாகலாம் என்ற ஒரு விபத்தில் சிக்கிய ஒரு குழந்தையை A என்ற ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர் காண்கிறார். அக்ககுழந்தையின்; காப்பாளரிடமிருந்து சம்மதம் பெற போதிய கால அவகாசம் இல்லை. அக்ககுழந்தையின் நலனுக்காக நன்னம்பிக்கையின் உள்நோக்கத்தில் அக்ககுழந்தையின் கெஞ்சிக்கேட்டலைப் பொருட்படுத்தாமல் A அறுவை சிகிச்சை செய்கிறார். A எக்குற்றத்தையும் புரிந்திருக்கவில்லை. (d) A என்பவர் தீப்பற்றி எரியும் வீட்டில் Z என்ற ஒரு குழந்தையுடன் இருக்கிறார். கீழேயுள்ள மக்கள் ஒரு போர்வையை ப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு விழுவது அக்குழந்தையை அநேகமாக கொல்லலாம் என தெரிந்தே ஆனால் குழந்தையை கொல்வதற்கு உள்நோக்கமின்றி மற்றும் அக்குழந்தையின் நலன்காக நன்னம்பிக்கையிலான உள்நோக்கத்தில் அவ்வீட்டின் மேலிருந்து அக்குழந்தையை A கீழே போடுகிறார். இங்கு அந்த விழுதலால் அக்குழந்தை கொல்லப்பட்டாலும் கூட A எக்குற்றத்தையும் புரிந்திருக்கவில்லை விளக்கம் - வெறும் பணம் சம்பந்தப்பட்ட நலன் மட்டுமே சட்டப்பிரிவுகள் 88, 89, 92களின் பொருளின் படி வருகிற நலனாக ஆகாது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 92 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்