இந்திய தண்டனை சட்டம் பிரிவு 6 (IPC Section 6 in Tamil)
விளக்கம்
சட்டம் முழுவதிலும், போர்க்குற்றத்தின் ஒவ்வொரு பொருள் வரையறையும், ஒவ்வொரு தண்டனை ஷரத்தும் மற்றும் ஒவ்வொரு அத்தகைய பொருள் வரையறையின் அல்லது தண்டனை ஷரத்தின் ஒவ்வொரு எடுத்துக்காட்டும். " பொது விலக்குகள்" என்ற தலைப்பிலான அத்தியாயத்திலுள்ள வீதி விளக்குகளுக்கு உட்பட்டது, அந்த விலக்குகள், அதே பொருள் வரையறை, தண்டனை ஷரத்து, அல்லது எடுத்துக்காட்டில், திரும்பவும் கூறப்படாத இருந்தாலும், புரிந்த கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டுகள் a) இச்சட்டத்தில் குற்றவாளிகளின் பொருள் வரையறைகளை கொண்டிருக்கிற சட்ட பிரிவுகள், 7 வருடங்கள் வயதுக்குக் கீழான ஒரு குழந்தை அத்தகைய குற்றங்களைப் புரிய முடியாது இருந்து வெளிப்படுத்தாவிட்டாலும், ஆனால், 7 வயதுக்கு கீழான ஒரு குழந்தையால் செய்யப்பட்ட எதுவும் குரு குற்றமாகாது என்று வகை செய்யப்பட்டுள்ள பொது விளக்கிற்கு உட்பட்டு, அந்தப் பொருள் வரையறைகள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். b) A என்ற ஒரு காவல் அலுவலர், கொலையை புரிந்திருக்கிற Z என்பவரை பிடி ஆணையின்றிக் கைது செய்கிறார். இங்கு, A முறையின்றி அடைத்து வைத்தால் குற்றத்திற்கு குற்றவாளி அல்ல. ஏனெனில், Z ஐ கைது செய்வதற்கு அவர் சட்டத்தால் கடமைப்பட்டவர் மற்றும் ஆகையினால், " சட்டப்படி செய்ய கடமைப்பட்ட ஒரு நபரால், செய்யப்பட்ட எதுவும் ஒரு குற்றமாகாது" என்று வகை செய்யப்பட்டுள்ள விலக்கிற்குள் இந்நேர்வு வருகின்றது.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34