இந்திய தண்டனை சட்டம் பிரிவு 425 (IPC Section 425 in Tamil)


விளக்கம்

தம்முடைய செயலால் முறையற்ற நஷ்டம் அல்லது தீங்கு பொதுமக்களுக்கு அல்லது ஒரு தனிப்பட்ட மனிதருக்கு உண்டாகும் என்று தெரிந்திருந்தும் அல்லது அத்தகைய நஷ்டம் அல்லது தீங்கினை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் ஒரு சொத்தை அழிப்பதும் அல்லது அந்தச் சொத்தின் மதிப்பு அல்லது உபயோகத்தை அழிக்கக் கூடிய அல்லது குறைக்கக் கூடிய செயலைப் புரிந்தாலும், அதற்குப் பாதகமான செயலைப் புரிந்தாலும், சொத்து அழித்தல் செய்யப்படுவதாக கொள்ளப்படும். விளக்கம்: அ) சொத்தின் சொந்தக்காரருக்கு அத்தகைய நஷ்டம் ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அந்தச் செயலை புரியாவிட்டாலும், அந்தச் செயலால் யாருக்காவது சொத்து அழிவு அல்லது தீங்கு ஏற்படக்கூடும் என்று அறிந்திருந்தால் அதுவே போதுமானது. ஆ) சொத்து அழித்தல் என்னும் குற்றத்தில் பிறருடைய சொத்துக்கு மட்டுமின்றி அத்தகைய குற்றம் புரியும் நபருடைய சொந்த சொத்துக்கும் பிறருடைய சொத்துக்கும் சேர்த்து அத்தகைய பாதகம் நேரிடலாம். உதாரணம்: 1. வடிவேலுக்கு முறையற்ற நஷ்டம் உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன், சாத்தப்பன் வடிவேலுக்குச் சொந்தமான ஒரு மதிப்புள்ள காப்பீடைத் தீயிட்டு அழிக்கிறார். சாத்தப்பன் இந்தப் பிரிவின்படி குற்றவாளியாகிறார். 2. ஒருவருக்குச் சொந்தமான தங்க மோதிரத்தை அவருக்கு முறையற்ற நஷ்டத்தை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் ஆற்றுக்குள் வீசி எறிகிறோம். இந்தப்பிரிவின்படி நாம் குற்றம் புரிந்தவர்களாகிறோம். 3. மற்றவருக்குச் சொந்தமான தோட்டத்துக்குள் நம்முடைய ஆடு, மாடுகளை, அவருடைய பயிர்களை அழிக்கவேண்டும் என்ற கருத்துடன் மேய விடுவதும் இந்தப் பிரிவின்படி குற்றமாகும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 425 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்