இந்திய தண்டனை சட்டம் பிரிவு 415 (IPC Section 415 in Tamil)


விளக்கம்

ஒருவரை ஏமாற்றி கள்ளத்தனமாக அல்லது நேர்மையின்றி ஏமாற்றப்பட்டவரைத் தூண்டி அவரிடம் உள்ள சொத்தை பிறருக்கு கொடுக்கும்படி செய்வதும், அல்லது பிறர் அவருடைய சொத்தை வைத்துக்கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கும்படி செய்வதும் அல்லது ஏமாற்றப்பட்டவரைக் கருத்துடன் தூண்டி அவர் செய்யாத காரியத்தைச் செய்யும்படி செய்ய வேண்டிய காரியத்தை செய்யாதிருக்கும்படி செய்வதும், அத்தகைய காரியத்தை அவர் செய்வதால் அல்லது செய்யாமல் இருப்பதால் அவருடைய மனம், உடல், புகழ் அல்லது சொத்துக்குத் தீங்கினை உண்டாக்கினாலும் அல்லது தீங்கு உண்டாக்க கூடியதாக இருந்தாலும் அதனை வஞ்சித்தல் என்று சொல்லப்படுகிறது. விளக்கம்: நேர்மையின்றி தகவல்களை மறைப்பதும் இந்த பிரிவின்படி ஏமாற்றுதலாகக் கொள்ளப்படும். உதாரணம்: அ) சிவக்குமார், தாம் ஓர் ஐ.ஸீ.எஸ் அதிகாரி என்ற கருத்துடன் கந்தசாமியை ஏமாற்றி அவருடைய கடையிலிருந்து கடனுக்கு பொருட்களை வாங்குகிறார். அவதிற்கு உரிய பணத்தைத் திருப்பித்தர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லாதபோது அவர் இந்த பிரிவின்படி குற்றவாளி ஆகிறார். ஆ) ஒரு பொருளின் மீது ஒரு பொய்யான குறியை இட்டு, அந்தப்பொருளைப் புகழ் பெற்ற தயாரிப்பாளர் ஒருவர் தயாரித்ததாக மற்றவரை நம்ப வைத்து, அவரை நேர்மையின்றி, அந்தப் பொருளை விலைக்கு வாங்கும்படி தூண்டுவது இந்த பிரிவின்படி குற்றமாகும். இ) ஒரு பொருளுடைய மாதிரியைக் காட்டி ஒருவரை நம்ப வைத்து, வேறு ஒரு பொருளை அவர் வாங்கும்படி நேர்மையின்றித் தூண்டுதலும் இந்தப் பிரிவின்கீழ்க் குற்றமாகும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 415 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்