இந்திய தண்டனை சட்டம் பிரிவு 390 (IPC Section 390 in Tamil)


விளக்கம்

கொள்ளையில் திருட்டு அல்லது அச்சுறுதிப் பொருள் பறித்தல் நடைபெற்றிருக்கும் திருடுவதற்கு அல்லது திருடும்போது அல்லது திருடிய பொருளைக் கொண்டு செல்ல முயற்சி செய்யும் பொழுது குற்றவாளியால் யாருக்காவது தன்னிச்சையாக மரணம் அல்லது காயம் அல்லது முறையின்றித் தடுத்தல் நிகழ்ந்தாலும் அல்லது அதற்கான முயற்சி நடைபெற்றாலும் அல்லது மரணம் அல்லது காயம் அல்லது முறையின்றித் தடுத்தல் உடனே நிகழும் என்ற பயம் உண்டாக்கப்பட்டாலும் அத்தகைய திருட்டைக் கொள்ளை என்று சொல்லப்படும். அச்சுறுதிப் பொருள் பறிக்கும் பொழுது அச்சுறுத்தப்படும் நபருக்கு அருகில் குற்றவாளி இருக்கிறான். அந்த நபருக்கு அல்லது வேறொருவனுக்கு மரணம், காயம் அல்லது முறையின்றித் தடுத்தல் உடனே நிகழும் என்ற பயத்தை ஊட்டி, அவரிடமிருந்து அந்த இடத்திலேயே பொருளை பறித்தால் அந்தக் குற்றமும் கொள்ளை என்றே சொல்லப்படும். விளக்கம்: அத்தகைய பயத்தை உண்டாக்குவதற்குப் போதுமான தூரத்தில் குற்றவாளி இருந்தால், அவன் அருகில் இருந்ததாகக் கொள்ளப்படும். a) கந்தசாமியைக் கீழேதள்ளி அழுத்திப் பிடித்துக் கொண்டு அவனிடமுள்ள ஆபரணங்களையும் பணத்தையும் ஜேம்ஸ் திருடும்பொழுது தன்னிச்சையாக கந்தசாமியை எங்கும் செல்லவிடாமல் முறையின்றி தடுப்பதால் இந்தத் திருட்டு கொள்ளையாகிறது. b) நெடுஞ்சாலையில் வடிவேலுவை வழிமறித்த கண்ணப்பன் தன் கைத்துப்பாக்கியால் காயம் ஏற்படும் என்று அச்சுறுத்தி வடிவேலுவிடமிருந்து பணம் பார்க்கிறான். அந்த இடத்தில் அவன் நேரிலும் இருக்கிறான். எனவே கண்ணப்பன் மீது கொள்ளையடித்த குற்றம் சாரும். c) சோமுவை அவனுடைய குழந்தையையும் நெடுஞ்சாலையில் சங்கரன் சந்திக்கிறான். சோமுவின் குழந்தையைக் கையில் எடுத்துக்கொண்ட சங்கரன் அந்தக் குழந்தையை மலை உச்சியிலிருந்து கீழே எறிந்து விடுவேன் என்று அச்சுறுத்தி சோமுவிடம் இருந்து பணம் பறிக்கிறான். சங்கரன் மீது கொள்ளையடித்த குற்றம் சாரும். d) -உன்னுடைய குழந்தை- என்னுடைய கூட்டாளிகளிடம் அகப்பட்டுக் கொண்டது எங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்கமாக கொடுக்காவிட்டால் உன்னுடைய குழந்தையைக் கொன்றுவிடுவோம் என்று அச்சுறுத்தி ஒருவரிடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது. இதனை அச்சுறுதிப் பொருள் பறித்த குற்றமாகக் கொள்ள வேண்டும். குழந்தையை உடனே கொன்று விடுவார்கள் என்ற அச்சம் உண்டாக்கப்பட்டதால்தான் இந்த குற்றம் கொள்ளை ஆகும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 390 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்