இந்திய தண்டனை சட்டம் பிரிவு 37 (IPC Section 37 in Tamil)


விளக்கம்

பல்வேறு செயல்களின் மூலமாக ஒரு குற்றம் புரியப்படும்போது, அச்செயல்களில் ஏதாவது ஒன்றைத் தனியாகவோ அல்லது யாரேனும் பிற நபருடன் கூட்டாகவோ செய்வதால், அக்குற்றம் புரிகையில் உள்நோக்கத்துடன் ஒத்துழைக்கும் எந்தவொரு நபருமு; அக்குற்றத்தைப் புரிகிறார். எடுத்துக்காட்டுகள் (ய) A மற்றும் B, தனித்தனியாக மற்றும் பல்வேறு காலங்களில் Z என்பவருக்குச் சிறிய அளவிலான நஞ்சிகைக் கொடுத்து, அவரைக் கொலை செய்ய உடன்படுகின்றனர். உடன்படிக்கையின்படி, A மற்றும் B, Zஐ கொலைச் செய்யும் உள்நோக்கத்துடன் நஞ்சைக் கொடுக்கின்றனர். Z அவ்வாறு அவருக்குக் கொடுக்கப்பட்ட பல்வேறு அளவுகளிலான நஞ்சின் விளைவால் மரணமடைகிறார். இங்கு, A மற்றும்B கொலையைப் புரியும் உள்நோக்கத்தில் ஒத்துழைக்கின்றனர். மற்றும் மரணத்தை விளைவிக்கின்ற ஒரு செயலை அவர்களில் ஒவ்வொருவரும் செய்வதால், அவர்களுடைய செயல்கள் தனித்தனியாக இருந்தாலும், அவர்கள் இருவரும் குற்றத்திற்கு குற்றவாளியாவார்கள். (b) A மற்றும் B இணை சிறை அலுவலர்களாக உள்ளார்கள், மற்றும் அதனால் 6 மணி நேரங்களுக்கு ஒரு தடவையில் மாறிமாறி Z என்ற ஒரு சிறைவாசியின் காவல் பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள். A மற்றும் Bஇ Zஇன் மரணத்தை விளைவிக்கும் உள்நோக்கத்தில், அவர்கள் ஒவ்வொருவாpன் பணி நேரத்தின்போது, Zக்கு கொடுக்கும் நோக்கத்திற்காக அவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்த உணவை சட்டப்பூர்வமற்ற முறையில் கொடுக்காமல் விட்டுவிடுதலால், அவ்விளைவை ஏற்படுத்த தெரிந்தே ஒத்துழைக்கின்றனர். Z பசியினால் மரணமடைகிறார். A மற்றும் B ஆகிய இருவரும் Zன் கொலைக்கு குற்றவாளியாவார்கள். (c) A என்ற ஒரு சிறை அலுவலர், Z என்ற சிறைக் கைதயின் காவல் பொறுப்பைக் கொண்டிருக்கிறார். Zஇன் மரணததை விளைவிக்கும் உள்நோக்கத்தில், Zக்கு உணவை சட்டப்பூர்வமற்ற முறையில் கொடுக்காமல் A விட்டுவிடுகிறார். அதன் விளைவால் Z அவரது பலத்தை அதிகமாக இழந்துவிடுகிறார். ஆனால் அந்த பட்டினியானது அவரது மணரத்தை விளைவிக்கப் போதுமானதாக இல்லை.ட A அவரது பணியிலிருந்து நீக்கப்படுகிறார். மற்றும் B அவருக்குப் பின் பொறுப்பேற்கிறார். B A உடன் வஞ்சகக் கூட்டு அல்லது ஒத்துழைப்பு எதுவுமின்றி Zன் மரணத்தை அவர் அதனால் அநேகமாக விளைவிக்கக்கூடும் என தெரிந்தே Zக்கு உணவு கொடுப்பதை சட்டபூர்வமற்ற முறையில் செய்யாமல் விட்டுவிடுகிடிறார். Z பசியினால் மரணமடைகிறார். B கொலைக்குற்றவாளியாகிறார். ஆனால் A, B உடன் ஒத்துழைக்காததால் A கொலையை புரிவதற்கான ஒரு முயற்சி மட்டுமே குற்றவாளியாகிறார்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 37 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்