இந்திய தண்டனை சட்டம் பிரிவு 363A (IPC Section 363A in Tamil)


விளக்கம்

பிச்சைக்காரர்களாக வேலைசெய்ய அல்லது பிச்சையெடுப்பதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் இளஞ்சிறுவர்களைக் (சிறுமியரை) கவர்தலும் அல்லது அவர்களை சட்டபூர்வமாகப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்களின் பொறுப்பிலிருந்து கொண்டுபோவதும் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட வேண்டும். பிச்சை எடுப்பதற்குப் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் இளஞ்சிறுவர்களை (சிறுமியர்) அங்கஹீனப்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனையுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும். சட்டபூர்வமான பாதுகாக்கும் கடமையுள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் இளஞ்சிறுவர்களைப் பிச்சையெடுப்பதற்குப் பயன்படுத்தினால், அந்த நபர் அத்தகைய சிறுவரைக் கவர்ந்துவந்து அல்லது பிச்சையெடுப்பதற்கென்றே சட்டபூர்வமான பாதுகாப்பிலிருந்து தன்னுடைய பொறுப்புக்குக் கொண்டுவந்து வைத்திருப்பதாகவே கொள்ளப்படும் (தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அந்த நபரையே சாரும்). இந்தப் பிரிவில், - (a) பிச்சை எடுத்தல் என்பது: i) பாடுவது, ஆடுவது, சோதிடம் கூறுவதும் விதைகள் புரிவது பண்டங்களை விற்பது என்ற முறைகளில் நடித்துப் பொதுஇடங்களில் தர்மம் கேட்டுப்பெறுவதையும். ii) தர்மம் கேட்டும் அல்லது பெரும் நோக்கத்துடன் தனிப்பட்டவர்களின் இடங்களுக்குச் செல்வத்தையும். iii) தன் உடம்பில் அல்லது மற்றொருவருடைய உடம்பில் அல்லது மிருகத்திடம் உள்ள புண், காயம், குறைபாடு நோய் அல்லது தீங்கை, தர்மம் பெற வேண்டும், காசு பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் காட்டுவதையும். iv) இளஞ்சிறுவர்களை (சிறுமியர்) தர்மம் பெறவேண்டும் என்று நோக்கத்துடன் காட்டுவது ஆகியவற்றைக் குறிக்கும். (b) சிறுவர் (சிறுமியர்) என்பது (i) பதினாறு (16) வயதுக்கு உட்பட்ட ஆணையும். (ii) பதினெட்டு (18) வயதுக்கு உட்பட்ட பெண்ணையும் குறிக்கும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 363A க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்