இந்திய தண்டனை சட்டம் பிரிவு 299 (IPC Section 299 in Tamil)


விளக்கம்

மரணத்தை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் ஒரு செயலைப் புரிதல் அல்லது மரணம் விளைவிக்கக் கூடிய உடல் காயத்தை உண்டு பண்ண வேண்டும் என்ற கருத்துடன் ஒரு காரியத்தைச் செய்தல் அல்லது தன்னுடைய செய்கையால் மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்தும் அந்த செயலை புரிதல் ஆகியவற்றால் மரணம் ஏற்பட்டால், அதனை மரணம் விளைவிக்கும் குற்றம் என்று கூறப்படுகிறது. உதாரணம்: 1. மொய்தீன், ஒரு பள்ளத்தைக் குச்சிகளை, சருகுகளை போட்டு மரணம் உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் மூடி மறைக்கிறான். தன்னுடைய செயலால் மரணம் உண்டாகும் என்பதை மனதார அவன் அறிந்தும் இந்த காரியத்தைப் புரிகின்றான். பள்ளம் இருக்கிறது என்பதை அறியாத கோவிந்தன் நடந்து வரும்போது அந்தப் பள்ளத்தில் விழுந்து மரணம் அடைகிறான். இந்த மரணத்துக்கு மொய்தீன் பொறுப்பேற்க வேண்டும். ஆகவே மரணம் விளைவிக்கும் குற்றத்தை மொய்தீன் புரிந்தவனாகிறான். 2. ஒரு புதருக்குப் பின்னால் மூர்த்தி மறைந்திருக்கிறான் என்பது ராஜூவுக்குத் தெரியும். அனால் ராமனுக்கு அதைபற்றித் தெரியாது. மூர்த்திக்கு மரணத்தை விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது இப்படிச் செய்தல் மூர்த்திக்கு மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்திருந்தும் ராஜு அந்தப் புதரை நோக்கிச் சுடும்படி ராமனைத் தூண்டுகிறான். ராமன் அப்படியே சுடுகிறான். குண்டு பட்டு மூர்த்தி மரணம் அடைகிறான். ராமன் குற்றமற்றவனாக இருக்கலாம். அனால் ராஜுவின் மீது மரணத்தை விளைவிக்கும் குற்றம் சாரும். விளக்கம் - 1: நோய்வாய்ப்பட்டு அல்லது இயலாமையால் அவதியுற்றுத் துன்பப்படுபவனுடைய உடலுக்கு காயம் உண்டாக்குவதன் மூலம், அவனுடைய சாவைத் துரிதப்படுத்துகின்றனர். அந்த நிலையில் அந்த நபர் அவனுக்கு மரணத்தை உண்டாக்கியதாகவே கருதப்படுவார். விளக்கம் - 2: உடல் காயத்தால் மரணம் உண்டாக்கினால் காயத்தை உண்டாக்கியவன் அந்த மரணத்தை விளைவித்ததாகக் கொள்ளப்படுவான். காயம்பட்டவுடன் மருத்துவ உதவியை நாடிச் சென்றிருந்தால் மரணம் விளைந்திருக்காது என்றாலும், மரணத்தின் பொறுப்பு அவனையே சாரும். விளக்கம் - 3: தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு மரணத்தை உண்டாக்குவது இந்தக் குற்றத்தில் வராது. அனால் குழந்தையின் உறுப்புகளில் ஏதாவது தாயின் கர்பப்பையிலிருந்து வெளியே வந்த பிறகு அத்தகைய மரணம் உண்டாக்கப்பட்டிருந்தால் அந்தச் செயல் குற்றமாகும். பிறந்த குழந்தை பிறப்பதற்கு முன்பே இறந்திருக்கலாம். அல்லது முழுமையாகப் பிறப்பதற்கேற்ப வாய்ப்பில்லாமல் இருக்கலாம். இருப்பினும் கர்பப்பையை விட்டு நீங்கியவுடன் மரணத்தை உண்டாகும் செயல் என்று இடம் பெறக்கூடாது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 299 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்