இந்திய தண்டனை சட்டம் பிரிவு 293 (IPC Section 293 in Tamil)


விளக்கம்

இதற்கு முன் சொல்லப்பட்ட பிரிவின்படி குற்றம் கொள்ளத்தக்க ஆபாச பொருளை இருபது வயதுக்கு குறைந்தவர்களுக்கு விற்பதும், வாடகைக்கு கொடுப்பதும், வழங்குவதும், காட்டுவதும், அவர்கள் மத்தியில் புழங்கவிடுவதும் அல்லது அவர்களிடையே இத்தகைய செயல்களை புரிவதற்கு முயற்சி செய்வதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு 6 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். ஆபாசமான புத்தகம், விளக்கம், படம், ஓவியம் பொருள் என்பனவற்றை குறிக்கும். மதசம்பந்தமான புத்தகம், வெளியீடு எழுத்து, படம், ஓவியம் ஆகியவற்றிற்கும் கோவிலில் அல்லது கோவில் ரதங்களில் பொறிக்கப்பட்டுள்ள செதுக்கப்பட்டுள்ள அல்லது உருவாக்கி உள்ளவற்றிகும் இதில் அடங்காது.
 
இளம் நபருக்கு ஆபாசப் பொருட்களை விற்றல், முதலியன
எவரேனும் கடைசி முந்தைய சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவதொரு அத்தகைய ஆபாசப்பொருளை இருபது வருடங்கள் வயதுக்குக் கீழான யாரேனும் ஒரு நபருக்கு விற்றால், வாடகைக்கு விட்டால், விநியோகித்தால், பார்வையில் வைத்தால் அல்லது சுற்றுக்கு விட்டால், அல்லது அவ்வாறு செய்ய முனைந்தால் அல்லது முயன்றால், முதல் தண்டிப்பில், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன் மற்றும் ரூபாய் இரண்டாயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் மற்றும் ஒரு இரண்டாவது அல்லது பிந்தைய தண்டிப்பில் ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், மற்றும் ரூபாய் ஐந்தாயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடனும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம்:- சட்டப்பிரிவு 293 இல்:- (a )."கடைசி முந்தைய சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவதொரு அத்தகைய ஆபாசப் பொருளை"என்ற வார்த்தைகளுக்கு மாற்றாக "சட்டப் பிரிவு 292இல் குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய ஏதாவதொரு ஆபாசப் பொருள் அல்லது சட்டப்பிரிவு 292A இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவதொரு அத்தகைய செய்தித்தாள், பருவ இதழ் சுற்றறிக்கை, படம் அல்லது பிற அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட ஆவணம்" என்ற வார்த்தைகள், எண்கள் மற்றும் எழுத்தால் பதிலீடு செய்யப்பட வேண்டும். (b )"ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய"என்ற வார்த்தைகளுக்கு மாற்றாக "மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய "என்ற வார்த்தைகள் பதிலீடு செய்யப்பட வேண்டும். (c )பக்க ஒரக் குறிப்பில், "ஆபாசப் பொருட்கள்" என்ற வார்த்தைகளுக்குப் பின்பு, "ஏதாவதொரு மிக அருவருப்பான அல்லது கீழ்த்தரமான மிரட்டிப் பறிக்கும் உள்நோக்கத்திலான விஷயம்"என்ற வார்த்தைகள் செருகப்பட வேண்டும். [சட்டம் 25/1960 இன் சட்டப் பிரிவு 4ஐப் பார்க்கவும், அமலுக்கு வந்த நாள்:09.11.1960]


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 293 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்