இந்திய தண்டனை சட்டம் பிரிவு 29 (IPC Section 29 in Tamil)
விளக்கம்
“ஆவணம்" என்ற வார்தையானது, எழுத்துக்கள், எண்கள் அல்லது குறிகள் முறைகளால் அல்லது அந்த வழிகளில் ஒன்றுக்கு மேற்பட்டவைகளால், ஏதாவதொரு பொருளின்மீது வெளிப்படுத்தப்பட்ட அல்லது விவாpக்கப்பட்ட விஷயத்தின் சாட்சியமாக பயன்படுத்தப்பட, அல்லது பயன்படுதத்படலாம் என எண்ணப்பட்ட, அந்த ஏதாவதொரு விஷயத்தைக் குறிக்கிறது. விளக்கம் 1 : எந்த முறைகளினால் அல்லது எந்தப் பொருளின்மீது எழுத்துக்கள், எண்கள் அல்லது குறிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன, அல்லது ஒரு நீதிபரிபாலனை நீதிமன்றத்திற்காக அந்த சாட்சியம் எண்ணப்பட்டிருக்கிறதா, அல்லது இல்லையா, அல்லது ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படலாமா, அல்லது இல்லையா என்பது முக்கியமானதன்று. எடுத்துக்காட்டுகள் எந்தவொரு எழுத்துர ஒரு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை வெளிப்படுத்துகிறதோ, அந்த எழுத்துரு ஒப்பந்தத்தின் சாட்சியமாகப் பயன்படுத்தலாம் என்றுள்ளபோது, ஒரு ஆவணமாகும். ஒரு வங்கியர்மீதான ஒரு காசோலை, ஒரு ஆவணமாககும். ஒரு பகர அதிகாரப் பத்திரம், ஒரு ஆவணமாகும். எந்தவொரு நில வரைபடம் அல்லது திட்ட வரைபடம் சாட்சியமாகப் பயன்படுத்தப்பட அல்லது பயன்படுத்தப்படலாமென்று எண்ணப்பட்டதோ, அந்த ஒரு நில வரைபடம் அல்லது திட்ட வரைபடம், ஒரு ஆவணமாகும். கட்டளைகள் அல்லது அறிவுறுத்தல்களைக் கொண்டிருக்கிற ஒரு எழுத்துரு, ஒரு ஆவணமாகும். விளக்கம் 2: வணிக அல்லது பிற பயன்பாட்டுகளினால் விளக்கப்பட்ட எழுத்துக்கள், எண்கள் அல்லது குறிகளினால் வெளிப்படுத்தப்பட்டது எதுவாக இருப்பினும், உண்மையிலேயே அவ்வாறாக வெளிப்படுத்தப்பட்டிருக்காவிட்டாலும் கூட, அத்தகைய எழுத்துக்கள், எண்கள் அல்லது குறிகள் இச்சட்டப்பிரிவின் பொருளின்படி வெளிப்படுத்தப்பட்டிருப்பதற்கு நிகராகக் கொள்ளப்படவேண்டும். எடுத்துக்காட்டு A என்பவர், அவரது உத்தரவில் பட்டுவாடா செய்ய ஒரு மாற்றுச் சீட்டின் பின்புறம் தனது பெயரை எழுதுகிறார். வணிக வழக்கத்தின்படி, அச்சீட்டானது, வைத்திருப்பவருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது அத்தகைய மேற்குறிப்பின் பொருளாகும். அந்த மேற்குறிப்பு ஒரு ஆவணமாகும். மற்றும் அதை “வைத்திருப்பவருக்குக் கொடுக்க வேண்டும்” அல்லது அத்தகைய விளைவை ஏற்படுத்தும் சொற்கள் அந்த கையெழுத்துக்குமேல் எழுதப்பட்டுள்ளது என்ற வார்த்தைகள் இருப்பதுபோன்றும் அதே முறையில் பொருள் கொள்ளப்பட வேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34