இந்திய தண்டனை சட்டம் பிரிவு 216 (IPC Section 216 in Tamil)


விளக்கம்

எவரேனும், யாரேனும் ஒரு நபர் ஒரு குற்றத்திற்குத் தண்டிக்கப்பட்டு அல்லது குறைஞ்சாட்டப்பட்டு அக்குற்றத்திற்க்காக சட்டபூர்வ காவலில் இருக்கும் போது அத்தகைய காவலிலிருந்து தப்பிவிட்டால்; அல்லது எப்போதெல்லாம் ஒரு பொதுப் பணியாளர் என்ற முறையிலான தனது சட்டபூர்வ அதிகாரங்களை பயன்படுத்துகிறாரோ அப்போது ஒரு குற்றத்திற்காக ஒரு குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட உத்தரவிடும்போது, அத்தகைய தப்பிவிட்டதை அல்லது கைது செய்யப்பட வேண்டிய உத்தரவைத் தெரிந்த எவரேனும், அந்நபர் கைது செய்யப்படுவதிலிருந்த தடுக்கும் உள்நோக்கத்துடன், அவருக்கு புகலிடம் கொடுத்தால் அல்லது மறைத்து வைத்தால் பின்வருமாறான வகையில் கூறப்பட்டபடி தண்டிக்கப்பட வேண்டும், அதாவது:- ஒரு மரணதண்டனையாக இருந்தால்:- அந்நபரை காவலில் வைத்திருந்ததற்கான அல்லது கைது செய்யப்பட்ட உத்தரவிடப்பட்ட அக்குற்றம், மரண தண்டணையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன்.அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால்:- அக்குற்றம் ஆயுள் சிறைத்தண்டனையுடன் அல்லது பத்து வருடங்களுக்கான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், அவர் மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் மற்றும் அபராதத்துடன் அல்லது அபராதமில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்; மற்றும் அக்குற்றம் ஒரு வருடத்திற்கு மேல் நீட்டிக்கப்பட்ட ஒரு கால அளவிலான ஆனால் பத்து வருடங்கள் இல்லாத சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், அவர் அத்தகைய குற்றத்திற்கென்று வகை செய்யப்பட்டுள்ள நீண்ட காலச் சிறைத்தண்டனையின் நான்கில் ஒரு பங்கு என்ற ஒரு கால அளவிலான அக்குற்றத்திற்கென்று வரையறுக்கப்பட்டுள்ள வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். இச்சட்டப்பிரிவில் "குற்றம்" என்பது, ஏதாவதொரு செயல் அல்லது செய்வனச் செய்யாமை இந்தியாவில் புரியப்பட்டால் எவ்வாறு தண்டனைக்குள்ளாகும் ஒரு குற்றமாக ஆகுமோ, அதேபோல், அது இந்தியாவிற்கு வெளியில் புரியப்பட்டாலும் குற்றவாளியாவதையும் உள்ளடக்குகிறது மற்றும் அதற்காக அயல்நாட்டில் ஒப்படைத்தல் சம்பந்தப்பட்ட சட்டப்படியோ அல்லது பிற வகையிலோ இந்தியாவில் கைதுக்கு உள்ளாதல் அல்லது காவலில் வைக்கப்படுவதையும் உள்ளடக்குகிறது.மற்றும் இச்சட்டப்பிரிவின் நோக்கங்களுக்காக ஒவ்வொரு அத்தகைய செயலும் அல்லது செய்வனச் செய்யாமையும், அத்தகையவற்றிற்காக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இந்தியாவில் அதற்காக குற்றவாளி என்பதுபோலவே தண்டிக்கப்படவேண்டும் என்பதற்கு நிகராகக் கொள்ளப்பட வேண்டும். விலக்கு:-கைது செய்யப்பட்ட நபருக்கான புகலிடம் அல்லது மறைத்து வைத்தல், எந்நேர்வில் அந்நபரின் கணவன் அல்லது மனைவியால் உள்ளதோ, அந்நேர்வில் இந்த ஷரத்து நீட்டிக்காது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 216 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்