இந்திய தண்டனை சட்டம் பிரிவு 214 (IPC Section 214 in Tamil)


விளக்கம்

எவரேனும், யாரேனும் ஒரு நபருக்கு ஒரு குற்றத்திலிருந்து அந்நபரை மறைப்பதற்கு அல்லது ஏதாவதொரு குற்றத்திற்கான சட்டபூர்வதண்டனையிலிருந்து யாரேனும் ஒரு நபரை அவர் தப்பிக்க வைப்பதற்காக, அல்லது சட்டபூர்வத் தண்டனைக்கு உள்ளாக்கும் நோக்கத்திற்காக யாரேனும் ஒரு நபருக்கு எதிராக செயல் நடவடிக்கை எதுவும் அவர் எடுக்காமலிருப்பதற்குப் பலனாக, ஏதாவதொரு கையூட்டைக் கொடுத்தால் அல்லது கொடுக்கப்பட செய்தால், அல்லது கொடுக்க ஒத்துக்கொண்டால் அல்லது கொடுக்க உடன்பட்டால் அல்லது உடன்படச் செய்தால், அல்லது ஏதாவதொரு சொத்தை யாரேனும் ஒரு நபருக்கு திரும்பக் கிடைக்கச் செய்தால் அல்லது திரும்ப கிடைக்கும்படி செய்யப்படச் செய்தால். ஒரு மரண தண்டனையாக இருந்தால்:- அக்குற்றம் மரண தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால்:- மற்றும் அக்குற்றம் ஆயுள் சிறைத்தண்டனையுடன் அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். மற்றும் அக்குற்றம் பத்து வருடங்களுக்கு மிகாத சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், அக்குற்றத்திற்க்கென்று வகை செய்யப்பட்டுள்ள நீண்ட கால சிறைத் தண்டனையின் நான்கில் ஒரு பங்கு என்ற ஒரு கால அளவிலான அக்குற்றத்திற்கென்று வரையறுக்கப்பட்டுள்ள வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். விலக்கு:-சட்டப்படி ஒத்திசைவாக தீர்த்துக் கொள்ளக்கூடிய குற்றத்திற்கான ஏதாவதொரு வழக்குக்கு, சட்டப் பிரிவுகள் 213 மற்றும் 214 இன் ஷரத்துகள் நீளாது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 214 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்