இந்திய தண்டனை சட்டம் பிரிவு 212 (IPC Section 212 in Tamil)


விளக்கம்

எப்போதெல்லாம் ஒரு குற்றம் புரியப்பட்டிருக்கிறதோ, அப்போது எவரேனும் ஒரு நபரைக் குற்றம் புரிந்தவர் என அவருக்கு தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு காரணமிருக்கும்போது அவரைச் சட்டபூர்வமான தண்டனையிலிருந்து தப்பிக்க வைக்கும் உள்நோக்கத்துடன், புகலிடம் கொடுத்தால் அல்லது மறைத்து வைத்தால்; மரண தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாயிருந்தால்:- அக்குற்றம் மரண தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், ஐந்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். ஆயுள் சிறைத்தண்டனையுடன், அல்லது சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால்:- மற்றும் அக்குற்றம் ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால் மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். இச்சட்டப்பிரிவின்படி, "குற்றம்"என்பது, ஏதாவதொரு செயல், இந்தியாவிற்கு வெளியே ஏதாவதொரு இடத்தில் புரியப்பட்டு அது பின்வருகின்ற சட்டப்பிரிவுகளில் ஏதாவதொன்றின்கீழ் அதாவது, 302, 304, 382, 392, 393, 394, 395, 396, 397, 398, 399, 402, 435, 436, 449, 450, 457, 458, 459 மற்றும் 460 ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்படக்கூடியதாக இருப்பதை உள்ளடக்குகிறது மற்றும் இச்சட்டப்பிரிவின் நோக்கத்திற்காக அத்தகைய ஒவ்வொரு செயலும், அக்குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இந்தியாவில் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு நிகராக கொள்ளப்பட வேண்டும். விலக்கு:-ஏதாவதொரு வழக்கில் புகலிடம் அளித்தல் அல்லது மறைத்து வைத்தல் குற்றவாளியின் கணவன் அல்லது மனைவியால் இருக்கும்போது, அதற்கு இந்த ஷரத்து நீட்டிக்காது. எடுத்துக்காட்டு A என்பவர், B என்பவர் கூட்டுக்கொள்ளை புரிந்திருக்கின்றார் என அறிந்தும், அவரை சட்டப்பூர்வ தண்டனையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமென்று B ஐ தெரிந்தே மறைத்து வைக்கிறார்.இங்கு B ஆயுள் சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப் பட வேண்டுமாதலால், A மூன்று வருடங்களுக்கு மிகாது ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 212 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்