இந்திய தண்டனை சட்டம் பிரிவு 193 (IPC Section 193 in Tamil)


விளக்கம்

எவரேனும், ஒரு நீதிமன்றச் செயல் நடவடிக்கையின் எந்தஒரு நிலையிலும், பொய் சாட்சியத்தை உள்நோக்கத்துடன் அளித்தால், அல்லது நீதிமன்ற செயல் நடவடிக்கையின் எந்தவொரு நிலையிலும் பயன்படுத்தப்படும் நோக்கத்திற்காக, பொய்யான சாட்சியத்தை புனைந்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்; மற்றும் ஏதாவதொரு பிற நேர்வில் உள்நோக்கத்துடன் பொய் சாட்சியத்தை அளித்தால் அல்லது புனைந்தால், மூன்று வருடங்கள் வரை நீடிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராததிற்கு உள்ளாக்கப் படவும் வேண்டும். விளக்கம் 1:-ஓர் ராணுவ நீதிமன்றத்தின் முன்னிலையான ஒரு விசாரணையும் ஒரு நீதிமன்ற செயல் நடவடிக்கையாகும். விளக்கம் 2:- ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தின் முன்பான ஒரு செயல் நடவடிக்கையில் சட்டத்தின் வழிகாட்டுதலின்படிச் செய்யப்படும் ஒரு முதற்கட்டப் புலன்விசாரணை, அப்புலன்விசாரணை ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தின் முன்னிலையில் நடைபெறாவிட்டாலும் அதுவும் ஒரு நீதிமன்ற செயல் நடவடிக்கையின் ஒரு நிலைதான். எடுத்துக்காட்டு z என்பவர் நீதிமன்ற விசாரணைக்கு பணிந்து மேலனுப்பப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்யப்படுவதற்கு, A என்பவர் பொய்யானது என்று அவருக்குத் தெரிந்த ஒரு வாக்குமூலத்தை சத்திய பிரமாணத்தின் பேரில், ஒரு குற்றவியல் நடுவர் முன்னிலையில் நடைபெறும் ஒரு விசாரணையில் அளிக்கிறார்.இந்த விசாரணை ஒரு நீதிமன்ற செயல் நடவடிக்கையின் ஒரு பகுதியாதலால், A பொய் சாட்சியம் அளித்திருக்கின்றார். விளக்கம் 3:-ஒரு நீதிபரிபாலன நீதிமன்றம் சட்டப்படி செய்யப் பணிந்த ஒரு புலன்விசாரணை, மற்றும் ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தின் அதிகாரத்தின்படி செய்யப்பட்ட அப்புலன்விசாரணை ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தின் முன்னிலையில் செய்யப்படாவிட்டாலும், அதுவும் ஒரு நீதிமன்றச் செயல் நடவடிக்கையின் ஒரு நிலைதான். எடுத்துக்காட்டு நிலத்தின் எல்லைகளை கண்டறிவதற்கான ஏதாவதொரு விசாரணையில், ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தின் சார்பாக அனுப்பப்பட்ட ஓர் அலுவலர் முன்னிலையில் A என்பவர் சத்தியப் பிரமாணத்தின்பேரில், பொய்யானதெனத் தெரிந்தே ஒரு வாக்குமூலத்தை அளிக்கிறார்.இவ்விசாரணை, ஒரு நீதிமன்ற செயல் நடவடிக்கையின் ஓர் அங்கமாக இருப்பதால், A பொய் சாட்சியம் அளித்திருக்கின்றார்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 193 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்