இந்திய தண்டனை சட்டம் பிரிவு 192 (IPC Section 192 in Tamil)


விளக்கம்

எவரேனும், ஏதாவதொரு கணக்குப் புத்தகத்தில் அல்லது பதிவேட்டில் அல்லது மின்னணுப் பதிவில் ஏதாவதொரு சூழ்நிலை இருப்பதாக ஏற்படுத்தி அல்லது ஏதாவதொரு பொய்யான குறிப்பை ஏற்படுத்தி அல்லது ஒரு பொய்யான குறிப்பை கொண்டிருக்கிற ஏதாவதொரு ஆவணத்தை அல்லது மின்னணுப் பதிவை உண்டாக்கி, அத்தகைய சூழ்நிலையில் உள்நோக்கத்துடனான அத்தகைய பொய்யான குறிப்பு அல்லது பொய்யான வாக்குமூலம் ஒரு நீதிமன்ற செயல் நடவடிக்கையில் அல்லது ஒரு பொதுப்பணியாளரின் முன்னிலையில் அவர் பொதுப் பணியாளர் என்ற முறையில் ஓர் இசைவுமுறைத் தீர்ப்பாளரின் முன்னிலையில் சட்டப்படி எடுக்கின்ற ஒரு செயல் நடவடிக்கையில் மற்றும் அத்தகைய சூழ்நிலையில், அப்பொய்யான குறிப்பு அல்லது அப்பொய்யான வாக்குமூலம், அத்தகைய செயல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர் முன்பு ஒரு சாட்சியாக ஆகி, அச்சாட்சியத்தின் மீது ஒரு கருத்தை உருவாக்கும் அத்தகைய செயல் நடவடிக்கையின் முக்கியமான முடிவிற்கான அப்பொருள் பற்றி, அச்சாட்சியத்தின் பேரில் தவறான ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்த அது காரணமாக அமைந்தால், அத்தகைய நபர் பொய் சாட்சியத்தைப் புனைந்ததாகக் கூறப்படுகிறார் . எடுத்துக்காட்டுகள் (a ) A என்பவர், z என்பவரின் ஒருபெட்டியில்தான் நகைகள் இருந்ததாகக் கருதப்பட வேண்டும் என்பதற்காக, z இன் பெட்டியில் நகைகளை உள்நோக்கத்துடன் வைக்கிறார் மற்றும் இந்த சூழ்நிலை, z ஐக் திருட்டு குற்றத்திற்கு தண்டிக்கப்பட செய்யலாம்.A பொய்ச் சாட்சியத்தைப் புனைந்திருக்கின்றார். (b )B என்பவர், ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில் ஒரு உறுதியூட்டுச் சாட்சியமாகப் பயன்படுத்த எண்ணி அவருடைய கடைப் புத்தகத்தில் ஒரு பொய்யான குறிப்பை உண்டாக்குகிறார்.A பொய் சாட்சியத்தைப் புனைந்திருக்கின்றார். (c )z என்பவர் குற்றமுறு சதி குற்றத்திற்குத் தண்டிக்கப்பட வேண்டுமன்ற உள்நோக்கத்தில், z இன் கையெழுத்தில் இருப்பதைப் போன்ற ஒரு கடிதத்தை அக்குற்றமுறு சதியில் z இன் சகா குற்றவாளிக்கு அனுப்பியத்தைப்போன்று செய்து அக்கடிதத்தை காவல்துறை சோதனை செய்யக் கூடுமென்று அவருக்கு தெரிந்த இடத்தில் வைக்கிறார்.A பொய் சாட்சியத்தைப் புனைந்திருக்கின்றார்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 192 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்