இந்திய தண்டனை சட்டம் பிரிவு 191 (IPC Section 191 in Tamil)


விளக்கம்

எவரேனும், ஒரு சத்தியப் பிரமாணத்தினால் அல்லது சட்டத்தின் ஒரு வெளிப்படையான ஷரத்தினால் உண்மையைக் கூற சட்டத்தின்படி கடமைப்பட்டிருக்கும் போது அல்லது ஏதாவதொரு பொருளின் மீது ஒரு சத்தியப் பிரமாணம் அளிக்க சட்டத்தின்படி கடமைப்பட்டிருக்கும் போது பொய்யான ஏதாவதொரு வாக்குமூலத்தை, மற்றும் அவ்வாக்குமூலம் பொய்யானதென்று தெரிந்தே அல்லது அவ்வாறு நம்பியோ அல்லது அது உண்மையானது என நம்பாமலோ அளித்தால், பொய் சாட்சியம் அளிக்கிறார் எனக்கூறப்படும். விளக்கம் 1:-ஒரு வாக்குமூலம், வாய்மொழியாகவோ அல்லது வேறுவிதமாகவோ கூறப்பட்டிருந்தாலும், அது இச்சட்டப்பிரிவின் பொருளிற்குள் வரும். விளக்கம் 2:-சான்றுக் கையொப்பமிடும் நபரது ஒரு பொய்யான வாக்குமூலம் பற்றிய நம்பிக்கை, இச்சட்டப்பிரிவின் பொருளில் வரும், மற்றும் தாம் நம்பாத ஒரு பொருளை நம்புவதாகக் கூறுவது வாயிலாகவும் மற்றும் அதேபோல் தாம் அறியாத ஒரு பொருளை அறிந்ததாகக் கூறுவது வாயிலாகவும், ஒரு நபர் பொய் சாட்சியம் அளித்த குற்றத்திற்கு குற்றவாளியாகலாம். எடுத்துக்காட்டுகள் (a ).ரூபாய் ஓராயிரத்தை, z இடமிருந்து பெறுவதற்கான B என்பவருடைய நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக, நீதிமன்ற விசாரணையில், B இன் நியாயமான கோரிக்கையை z ஒத்துக்கொண்டு கூறியதை தான் கேட்டதாக, A என்பவர் சத்தியப் பிரமாணம் செய்து பொய்யாகக் கூறுகிறார்.A பொய் சாட்சியத்தை அளித்துள்ளார். (b ) ஒரு சத்திய பிரமாணத்தின்படி உண்மையைக் கூறக் கடமைப்பட்ட, A என்பவர் ஒரு குறிப்பிட்ட கையொப்பம் z இன் உடையது என்று நம்பாவிட்டாலும் கூட, அக்கையொப்பம் z இன் உடையது தான் என நம்புவதாகக் கூறுகிறார்.இங்கு A தான் அதைப் பொய்யெனத் தெரிந்தும் கூறுகிறார்.மற்றும் அதனால் அவர் பொய் சாட்சியம் அளிக்கிறார். (c ) z என்பவரின் கையெழுத்தின் பொது இயல்பை அறிந்த A என்பவர், குறிப்பிட்ட கையெழுத்து ஒன்று z என்பவருடையது என தான் நம்புவதாகக் கூறுகிறார்.A நன்னம்பிக்கையில் அவ்வாறு கூறுகிறார்.இங்கு A இன் வாக்குமூலமானது, அவருடைய நம்பிக்கையை மட்டுமே சார்ந்தது, மற்றும் அவருடைய நம்பிக்கையின் காரணமாக அது உண்மையானது மற்றும் ஆகையினால், அக்கையெழுத்து z உடையதாக இல்லாமல் இருந்தாலும், A பொய் சாட்சியம் அளித்திருக்கவில்லை. (d ).ஒரு சத்யபிரமாணத்தினால் உண்மையைக் கூறக் கடமைப்பட்ட A என்பவர், ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றி எதையும் அறிந்திராதபோது, z என்பவர் ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்தது தனக்குத் தெரியுமென கூறுகிறார்.z அந்த இடத்தில் அக்குறிப்பிட்ட நாளில் இருந்திருந்தாலும் அல்லது இல்லாதிருந்தாலும், A பொய் சாட்சியம் அளிக்கிறார். (e ).சத்திய பிரமாணத்தின்படி உண்மையாகப் பொருள் விளக்கம் கொடுக்க அல்லது உண்மையாக மொழி பெயர்க்க கடமைப்பட்டுள்ள விளக்கியுரைப்பவர் அல்லது மொழி பெயர்ப்பாளாராகிய A என்பவர், அவர் உண்மையென்று நம்பாத மற்றும் உண்மையல்லாத ஒரு பொருள் விளக்கத்தையோ அல்லது மொழி பெயர்ப்பையோ, ஒரு வாக்குமூலத்தின் அல்லது ஆவணத்தின் உண்மையான பொருள் விளக்கம் அல்லது மொழி பெயர்ப்பு என்று கூறுகிறார் அல்லது சான்றளிக்கிறார்.A பொய் சாட்சியம் அளித்தவராகிறார்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 191 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்