இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188 (IPC Section 188 in Tamil)


விளக்கம்

எவரேனும், ஒரு உத்தரவைப் பிரகடனப்படுத்த சட்டப்படி அதிகாரம் கொண்ட ஒரு பொதுப் பணியாளரால் அத்தகைய உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்டது என தெரிந்தே, ஒருவரை ஒரு குறிப்பிட்ட செயலை தவிர்க்கவோ அல்லது அவரது உடைமையில் அல்லது அவரது நிர்வாகத்தின் கீழ் உள்ள குறிப்பிட்ட சொத்து குறித்தான குறிப்பிட்ட உத்தரவை நிறைவேற்றுவதாகவோ அவர் கட்டளைப்பட்டிருக்கும் போது, அத்தகைய கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தால்; அத்தகைய கீழ்ப்படியாமையானது, சட்டப்படி பணியமர்த்தப்பட்டுள்ள யாரேனும் ஒரு நபருக்கு தடை, தொல்லை அல்லது தீங்கை அல்லது தடை, தொல்லை அல்லது தீங்கை விளைவிக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதை ஏற்படுத்துகிறது அல்லது ஏற்படுத்தப்படலாமென்றால் ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் இருநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். மற்றும் அத்தகைய கீழ்ப்படியாமை, மனித உயிருக்கு, ஆரோக்கியத்திற்கு அல்லது பாதுகாப்பிற்கு அபாயத்தை விளைவித்தால் அல்லது விளைவிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினால் அல்லது ஒரு கலகம் அல்லது சச்சரவை விளைவித்தால் அல்லது விளைவிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினால் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். விளக்கம் :-குற்றம் புரிந்தவர், தீங்கை விளைவிக்க உள்நோக்கம் கொண்டிருக்க வேண்டும் அல்லது அவரது கீழ்ப்படியாமை தீங்கினை ஏற்படுத்திவிடலாமென்று திட்டமிட்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லாதது, கீழ்ப்படியாதிருக்கும் அந்த உத்தரவைப் பற்றி அவர் தெரிந்திருக்க வேண்டும், மற்றும் அவரின் கீழ்ப்படியாமை தீங்கை விளைவிக்கிறது, அல்லது விளைவிக்கலாமென்று தெரிந்திருந்தாலே போதுமானது. எடுத்துக்காட்டு ஒரு உத்தரவை சட்டப்படி பிரகடனப்படுத்த அதிகாரம் கொண்ட ஒரு பொதுப் பணியாளரால், ஒரு மத ஊர்வலம் ஒரு குறிப்பிட்ட தெருவின் வழியே செல்லக்கூடாது என கட்டளையிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, A என்பவர் அந்த உத்தரவுக்கு தெரிந்தே கீழ்ப்படியாமலிருக்கிறார்.மற்றும் அதனால் கலவரம் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறார்.இச் சட்டப்பிரிவின்படி வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தை A புரிந்திருக்கின்றார்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 188 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்