இந்திய தண்டனை சட்டம் பிரிவு 182 (IPC Section 182 in Tamil)


விளக்கம்

ஒரு பொது ஊழியரிடம் நெஞ்சறிந்தே பொய்யை கூறுகிறோம். அதன் விளைவாக அந்த அதிகாரி தன்னுடைய கடமையை சரிவர செய்ய முடியாமல் தவறுதலாக நடக்க வேண்டி நேரிடும். தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி பிறருக்கு தொல்லை தர நேரிடலாம். ஆகவே அத்தகைய பொய் தகவல் கொடுத்தவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
 
உள்நோக்கத்துடன் பொய்யான தகவலைத் தந்து, பொதுப் பணியாளர் அவரின் சட்டப்படியான அதிகாரத்தைப் பயன்படுத்த செய்து, மற்றொரு நபருக்கு தீங்கு
எவரேனும், பொய்யானது என அவருக்குத் தெரிந்த அல்லது நம்புகிற ஏதாவதொரு தகவலை, யாரேனும் ஒரு பொதுப் பணியாளருக்குத் தந்து அதன்மூலம் அத்தகைய பொதுப் பணியாளரை, உள்நோக்கத்துடன் பின்வருவனவற்றை அவர் செய்ய வைத்தால் அல்லது அதன்மூலம் செய்ய வைக்கப்படலாம் என அதைத் தெரிந்தே செய்ய வைத்தால்- (a ) எதைப்பற்றி தகவல் கொடுக்கப்படுகிறதோ அக்கொடுக்கப்பட்ட அத்தகைய தகவலின் பொருண்மை குறித்து உண்மையான நிலை அவருக்குத் தெரிந்திருக்கும்போது அத்தகைய பொதுப் பணியாளர் செய்யக் கூடாத அல்லது செய்யாமல் விடக்கூடாத எதையும் செய்ய அல்லது செய்யாது விடும்படி செய்ய அல்லது (b ) அத்தகைய பொதுப் பணியாளரின் சட்டப்பூர்வமான அதிகாரத்தை யாரேனும் ஒரு நபருக்குத் தீங்கு அல்லது தொல்லை தர பயன்படுத்த, ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு சிறைத்தண்டணையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டுகள் (a ) A என்பவர் ஒரு நடுவரிடம், அவருக்குக் கீழமைப் பணியிலுள்ள ஒரு காவல் அலுவலரான z என்பவர், பணியில் அசட்டை அல்லது தவறான நடத்தையின்படி அவர் குற்றவாளி என்ற தகவலை, அத்தகவல் பொய்யானது எனத் தெரிந்தும் அல்லது அத்தகைய தகவலினால்;அந்நடுவர் அந்த z என்பவரைப் பணியிலிருந்து நீக்கக்கூடும் என தெரிந்தே தெரிவிக்கிறார்.A இச்சட்டப்பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தைப் புரிந்திருக்கின்றார். (b )A என்பவர், z என்பவர் தடை செய்யப்பட்ட உப்பை ஒரு ரகசிய இடத்தில் வைத்திருக்கிறார் என்றும் ஒரு பொதுப் பணியாளருக்கு, அத்தகைய தகவல் பொய்யானது என தெரிந்தும் மற்றும் அவ்வாறு கொடுக்கப்படும் பொய்யான தகவலின் விளைவினால், z க்கு தொல்லை கொடுக்கும் விதமாக, z இன் இருப்பிடத்தில் சோதனை மேற்கொள்ளப்படக் கூடுமென்றும் தெரிந்தே, அப்பொய் தகவலைத் தெரிவிக்கிறார்.A இச்சட்டப்பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தைப் புரிந்திருக்கின்றார். (c ) A என்பவர் ஒரு காவல்துறை காவலரிடம், தான் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வைத்துத் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டதாக பொய்யான தகவலைத் தருகிறார், அப்படி தாக்கியவர்களில் எந்தஒரு நபரின் பெயரையும் அவர் குறிப்பிட்டு கூறவில்லை.ஆனால் அவரால் அப்படி கூறப்பட்ட தகவலின் விளைவாக, காவல் துறையினர் அக்கிராமத்திலுள்ளவர்களுக்கு அல்லது அவர்களில் சிலருக்கு தொல்லை தரும்படி விசாரணை நடத்தி மற்றும் சோதனை செய்வார்கள் என்று தெரிந்தும் அவ்வாறு தகவல் கூறிருக்கிறார், இச்சட்டப்பிரிவின் கீழ் ஒரு குற்றத்தை A புரிந்திருக்கின்றார்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 182 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்