இந்திய தண்டனை சட்டம் பிரிவு 177 (IPC Section 177 in Tamil)


விளக்கம்

எவரேனும், யாரேனும் ஒரு பொதுப் பணியாளரிடம் அவர் பொதுப் பணியாளர் என்ற முறையில், ஏதாவதொரு பொருளில் தகவலை அளிக்க கடமைப்பட்டுள்ளபோது, அப்பொருளின் மீதான தகவல் பொய்யானது என தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு காரணமிருக்கும்போது, உண்மையானது போன்று அளித்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டணையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். அல்லது, சட்டப்படி கடமைப்பட்டு அளிக்கப்பட வேண்டிய அத்தகவல், ஒரு குற்றம் புரியப்பட்டதன் பொருட்டு அல்லது ஒரு குற்றம் புரியப்படுவதைத் தடுக்கும் நோக்கத்திற்கு தேவைப்படுவதாக, அல்லது ஒரு குற்றவாளியைக் கைது செய்வதன் பொருட்டு இருந்தால் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டணையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன், எடுத்துக்காட்டுகள் (a )ஒரு நிலத்தின் சொந்தக்காரரான A என்பவர், அச் சொத்தின் எல்லைக்குள், ஒரு கொலை புரியப்பட்டிருக்கின்றது என தெரிந்தும், ஒரு பாம்பு கடித்த விபத்தின் விளைவாக அந்த மரணமானது ஏற்பட்டிருக்கின்றதென்று, மாவட்ட நீதிபதியிடம் வேண்டுமென்றே பொய்யான தகவல் தருகிறார்.A, இச்சட்டப்பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தைப் புரிந்த குற்றவாளியாகிறார். (b ).குறிப்பிட்ட அளவிலான புதிய வெளிநபர்களின் குழு ஓன்று பக்கத்திலுள்ள ஒரு இடத்தில் வசிக்கும் z என்ற ஒரு பணக்கார வணிகரிடம் கூட்டுக்கொள்ளையடிப்பதற்காக, தனது கிராமம் வழியாகக் கடந்து சென்றிருக்கின்றது என்பதுA என்ற அக்கிராமக் காவலாளிக்கு தெரிந்திருந்தும், மற்றும் அத்தகைய பொருண்மைத் தகவலை, உடனடியாகவும் சரியான நேரத்திற்குள்ளும் மிக அருகிலுள்ள காவல் நிலையத்தின் அலுவலருக்கு, வங்காளத் தொகுப்புச் சட்டம் ஒழுங்குமுறை III, 1821 இன் சட்ட பிரிவு VII துணைப்பிரிவு 5இன் கீழ் தெரிவிக்க அவர் கடமைப்பட்டிருக்கும் போது, சந்தேகப்படும்படித் தோன்றும் ஒரு குழுவான நபர்கள், வேறு ஒரு திசையில் உள்ள குறிப்பிட்ட தூரப்பகுதியிலுள்ள ஒரு இடத்தில் கூட்டுகொள்ளையடிக்க, தனது கிராமத்தைக் கடந்து சென்றதாக, அந்தக் காவல் அலுவலரிடம் வேண்டுமென்றே தவறானத் தகவலைத் தருகின்றார்.இங்கு A, இச் சட்டப்பிரிவின் பிந்தைய பகுதியில் வரையறுத்து குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ள குற்றத்தைப் புரிந்த குற்றவாளியாகிறார். விளக்கம்:-சட்டப் பிரிவு 176 மற்றும் இச்சட்டப் பிரிவிலும், "குற்றம்"என்ற வார்த்தையானது, இந்தியாவில் ஒரு செயல், சட்டப் பிரிவுகள் 302, 304, 382, 392, 393, 394, 395, 396, 397, 398, 399, 402, 435, 436, 449, 450, 457, 458, 459 மற்றும் 460 ஆகிய ஏதாவதொன்றின் கீழ் புரியப்பட்டால் எப்படி குற்றமாகுமோ அதேபோல் இந்தியாவிற்கு வெளியே புரியப்பட்ட அத்தகைய ஒரு செயலும் குற்றமாகும் என்பதையும் உள்ளடக்குகிறது, மற்றும் "குற்றம் புரிந்தவர்"என்ற வார்த்தையானது, ஏதாவதொரு அத்தகைய செயலுக்கு குற்றவாளி என குற்றஞ்சாட்டப்படும் யாரேனும் ஒரு நபரை உள்ளடக்குகிறது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 177 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்