இந்திய தண்டனை சட்டம் பிரிவு 161 (IPC Section 161 in Tamil)


விளக்கம்

பொது ஊழியருக்கு அரசு ஊதியம் கொடுக்கின்றது. ஒரு கடமையை மாற்றுவதற்காக அல்லது சலுகையை காட்டுவதற்காக அல்லது உதவி செய்வதற்காக அல்லது உபத்திரவம் தருவதற்காக அவர்கள் பிறரிடமிருந்து எத்தகைய ஊதியமும் அல்லது இலாபமும் லஞ்சமாக பெறக்கூடாது. அப்படி பெறுவது குற்றமாகும். பொது ஊழியர் என்ற சொல் மத்திய அரசில் பணிபுரிவோர், மாநில அரசில் பணிபுரிவோர், உள்ளாட்சித் துறையில் அல்லது அரசாங்க நிறுவனங்களில் பணி புரிவோர் ஆகிய அனைவரையும் குறிக்கும் (21 IPC பிரிவை பார்க்கவும்). பொது ஊழியராக பணிபுரியும் நிலையை எதிநோக்கி உள்ளவர்கள் மேலே குறிப்பிட்டபடி ஊதியம் பெறுவதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். Explanation: பொது ஊழியராக பணிபுரியும் நிலையினை எதிநோக்கி உள்ளவர் என்று இங்கே குறிப்பிடுவது வேலைக்கு செல்லும் வாய்ப்பினை உறுதியாக எதிர்நோக்கி உள்ளவர்களை மட்டும் குறிக்கும். அப்படி இல்லாமல் தான் ஒரு பொது ஊழியர் ஆகும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறி பிறரை ஏமாற்றி இத்தகைய ஊழியத்தை பெறுவோரை மோசடி செய்த குற்றத்திற்காக தான் தண்டிக்க முடியும். இந்த பிரிவு இவர்களுக்கும் பொருந்தாது. -ஊதியம்- என்ற சொல் பண ஊதியத்தை மட்டுமல்லாமல் பண மதிப்புள்ள பண்டங்களையும் குறிக்கும். சட்டபூர்வமாக வாங்கும் சம்பளத்தையும் அரசாங்கத்திடமிருந்து ஒரு பொது ஊழியர் சட்டப்பூர்வமாக பெற தகுந்த எல்லா வகையான வரவுகளும் அடங்கும். ஒரு காரியத்தை செய்வதற்கும் செய்யாமல் இருப்பதற்கும் பெறுகின்ற லாபத்தையும் இந்த பிரிவு உள்ளடக்கும்.
 
ஒரு அலுவலகச் செயலின் பொருட்டு சட்டபூர்வ ஊதியம் அல்லாத பிற கையூட்டைப் பெறுகின்ற பொதுப் பணியாளர்
[ஊழல் தடுப்பு சட்டம், 1988(49/1988)இன் சட்டப்பிரிவு 31இன் படி நீக்கப்பட்டது.அமலுக்கு வந்த நாள்:09.09.1988.]


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 161 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்