இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153A (IPC Section 153A in Tamil)


விளக்கம்

1. (a) பேச்சாலோ, எழுதாலோ அல்லது சைகையாலோ மத, இன, மொழி சாதி, சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளை தூண்டிவிட முயற்சி செய்வது குற்றமாகும். (b) அத்தகைய விரோத உணர்ச்சிகளால் போது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதும் குற்றமாகும். (c) குற்றம் என்று கருதக்கூடிய வன்முறை அல்லது வன்செயலை பயன்படுத்தும் கருத்துடன் அல்லது பயன்படுத்த பயிச்சி அளிக்கும் கருத்துடன் அல்லது சாதி, சமூகம், இனம், மதம், மொழி அல்லது வட்டாரக் குழு எதற்கும் விரோதமான வன்முறை அல்லது வன்செயலை பயன்படுத்தக்கூடிய பயிற்சி இயக்கம் உடற்பயிற்சி அல்லது அத்தகைய நடவடிக்கைகளில் பங்கு பெறுவோர் அநேகமாக பயன்படுத்த பயிற்சி அளிக்கக்கூடிய நடவடிக்கையாக அவை இருக்கின்றன என்று அறிந்தும் அவற்றில் பங்குபெறுவதும் பயிற்சி வேலையில் ஈடுபடுவதும் குற்றமாகும். அத்தகைய ஜாதி, சமூகம், இனம், மதம், மொழி அல்லது வட்டார குழுவினருக்கு அச்சத்தை அல்லது பீதியை அல்லது பாதுகாப்பு இல்லை என்ற உணர்வை அத்தகைய நடவடிக்கைகள் எந்த காரணம் கொண்டு உண்டாகின்றன. அல்லது உண்டாக்கக் கூடும் என்று அறிந்தும் அதில் பங்கு பெறுவோர் குற்றம் புரிந்தவர் ஆவார். இந்த குற்றத்திற்கு தண்டனையாக 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் சிறைக்காவலுடன் கூடிய அபராதங்கள் விதிக்கப்படும். 2. மேலே விவரிக்கப்பட்டுள்ள குற்றத்தின் வழிபாடு நடைபெறும் இடத்தில் செய்வது குற்றம், மத வழிபாட்டுக்கு ஆன மக்கள் கூடியிருக்கும் அரங்கிலும் அந்த குற்றத்தினை புரிய கொடுத்தது. அப்படி புரிந்தால் அதற்காக 5 ஆண்டுகள் வரை சிறைக் காவலும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
 
மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம், மொழி முதலானவற்றின் அடிப்படைகளில் வெவ்வேறு வகுப்புகளிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிலக்கணப் பேணலுக்கு பாதகமான செயல்களைச் செய்தல்
(1) எவரேனும் :- (a ).பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளால், அல்லது சைகைகளால், அல்லது பார்க்கக்கூடிய வெளிப்படுத்தல்களால் அல்லது மற்றபடியாக, மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம், மொழி, ஜாதி அல்லது பிரிவு அல்லது எந்தவிதமான ஏதாவதொரு பிற அடிப்படையில், வெவ்வேறான மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்புகள் அல்லது ஜாதிகள் அல்லது பிரிவுகளிடையே ஒற்றுமையின்மை அல்லது பகைமை உணர்வுகள், வெறுப்பு அல்லது மனக்கசப்பை ஊக்குவித்தால் அல்லது ஊக்குவிப்பதற்கு முயன்றால் அல்லது (b ).எந்தஒரு செயல், வெவ்வேறான மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்புகள் அல்லது ஜாதிகள் அல்லது பிரிவுகளிடையே நல்லிலக்கணத்தைப் பேணுவதற்குப் பாதகமாக இருக்கிறதோ, மற்றும் எந்தவொரு செயல் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிறதோ, அல்லது அநேகமாக விளைவிக்குமோ, அந்தவொரு செயலைப் புரிந்தால், அல்லது (c)ஏதாவதொரு பயிற்சி, இயக்கம், படைப் பயிற்சி அல்லது பிற ஒத்த செய்கையை, அத்தகைய செய்கையில் பங்குபெறுவோர்கள் குற்றமுறு பலப்பிரயோகம் அல்லது வன்முறையைப் பயன்படுத்த அல்லது அநேகமாக பயன்படுத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்பட்ட, அல்லது அத்தகைய செய்கையில் பங்குபெறுவோர்கள் குற்றமுறு பலப்பிரயோகத்தை அல்லது வன்முறையை பயன்படுத்துவார்கள் அல்லது அநேகமாக பயன்படுத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்படுவார்கள் என்று தெரிந்தே, ஏதாவதொரு மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்பு அல்லது ஜாதி அல்லது பிரிவுக்கு எதிராக மற்றும் அத்தகைய செய்கை ஏதாவதொரு எந்தவிதமான காரணத்திற்க்காகவும், அத்தகைய மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்பு அல்லது ஜாதி அல்லது பிரிவிற்கு இடையில் பயம் அல்லது பீதி அல்லது பாதுகாப்பற்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவதற்கு அல்லது அநேகமாக ஏற்படுத்தலாமென்ற, ஏற்பாடு செய்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். வழிபாட்டிடம் முதலான இடத்தில் புரியப்பட்ட குற்றம்:- (2) எவரேனும், ஏதாவதொரு வழிபாட்டிடத்தில் அல்லது மத வழிபாடு அல்லது மத சடங்குகளை செய்து கொண்டிருப்பதில் ஈடுபட்டிருக்கும் ஏதாவதொரு கூட்டத்தில், சட்ட உட்பிரிவு (1)இல் குறிப்பிடப்பட்ட ஒரு குற்றத்தைப் புரிந்தால், ஐந்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 153A க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்