இந்திய தண்டனை சட்டம் பிரிவு 141 (IPC Section 141 in Tamil)


விளக்கம்

1. மத்திய அரசை அல்லது மாநில அரசை வன்முறைச் செயல்களாலும் அச்சுறுத்தல்களாலும் தத்தம் கடமையினைச் செய்யவிடாமல் தடுப்பது; 2. சட்ட பூர்வமாக நிலைநாட்டப்பட ஒழுங்கை அல்லது நடவடிக்கையை எதிர்ப்பது; 3. அத்துமீறி நுழைத்தாள், சொத்துக்களை அழித்தல், வேறு குற்றங்களை செய்தல்; 4. மற்றவர்களின் தனி உரிமைகளை வன்முறைச் செயல்களினாலோ அல்லது அச்சுறுத்தல் நடவடிக்கைகளினாலோ தடுப்பது, பழிப்பது மறுப்பது; 5. வன்முறைச் செயல்களின் மூலம் செய்யக்கூடாத காரியத்தைச் செய்யும்படி பிறரைக் கட்டாயப்படுத்துவது; ஆகிய குற்றங்களை ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுத்தும் போது அந்தக் கூட்டத்தைச் சட்ட விரோதமான கூட்டம் என்று குறிப்பிடுகிறோம்.
 
சட்டவிரோதமான கும்பல்
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் ஒரு கும்பல், அந்த கும்பலிலிருக்கிற நபர்களின் பொதுவான நோக்கம் பின்வருமாறு இருந்தால், ஒரு "சட்டவிரோதமான கும்பல் " என குறிப்பிடப்படும். முதலாவது:-மத்திய அல்லது ஏதாவதொரு மாநில அரசாங்கம் அல்லது பாராளுமன்றம் அல்லது ஏதாவதொரு மாநிலத்தின் சட்டமன்றத்தை அல்லது யாரேனும் ஒரு பொதுப் பணியாளரின் சட்டபூர்வமான அதிகாரத்தைப் பயன்படுத்தும் அத்தகைய பொதுப் பணியாளரை, குற்றமுறு பலப்பிரயோகத்தால், அல்லது குற்றமுறு பலப்பிரயோகக் காட்டுதலால் பணிய வைப்பதற்கு ; அல்லது இரண்டாவது :-ஏதாவதொரு சட்டத்தை அல்லது ஏதாவதொரு சட்டப்பூர்வ அழைப்பாணை நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்கு அல்லது மூன்றாவது:-ஏதாவதொரு வன்குறும்பு அல்லது குற்றமுறு அத்துமீறல் அல்லது பிற குற்றத்தைப் புரிவதற்கு; நான்கவதாவது:-யாரேனும் ஒரு நபருக்கு, குற்றமுறு பலப்பிரயோகம், அல்லது குற்றமுறு பலப்பிரயோகக் காட்டுதல் வழிகளால், ஏதாவதொரு சொத்தை எடுப்பதற்கு அல்லது உடைமயில் பெற்றுக் கொள்வதற்கு அல்லது யாரேனும் ஒரு நபர் அனுபவிக்கும் ஒரு பாதையின் உரிமையை, அல்லது நீரின் பயன்பாட்டை அல்லது அவர் உடைமை அல்லது அனுபவம் கொண்டிருக்கிற ஒரு புலப்படாத உரிமையை இழக்கச் செய்வதற்கு, அல்லது ஏதாவது உரிமையை அல்லது உள்ளதாகக் கருதப்படும் உரிமையைச் செயல்படுத்துவதற்கு அல்லது ஐந்தாவது:-குற்றமுறு பலப்பிரயோகம், அல்லது குற்றமுறு பலப்பிரயோகக் காட்டுதல் வழிகளால் யாரேனும் ஒரு நபரை, அவர் சட்டப்படி செய்வதற்குக் கடமைப்படாததைச் செய்வதற்கு அல்லது அவர் சட்டப்படி செய்வதற்கு உரிமை கொண்டுள்ளதை செய்யாமல் விட்டுவிடுவதற்குக் கட்டாயப்படுத்துவதற்கு, விளக்கம்:-எந்தஒரு கும்பல், அது கூடியபோது சட்டவிரோதமாக இல்லையோ, அந்தவொரு கும்பல் அதன்பின்பு, ஒரு சட்டவிரோதமான கும்பலாக மாறலாம்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 141 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்