இந்திய தண்டனை சட்டம் பிரிவு 119 (IPC Section 119 in Tamil)


விளக்கம்

ஒரு பொதுப் பணியாளராக இருக்கிற எவரேனும், அத்தகைய பொதுப்பணியாளர் என்ற முறையில், எந்தஒரு குற்றம் புரியப்படுவதைத் தடுப்பதற்கு அவர் கடமை கொண்டுள்ளாரோ, எந்தஒரு குற்றம் புரியப்படுவதற்கு உதவி செய்யும் உள்நோக்கத்தில் அல்லது அவர் அதனால் அநேகமாக உதவி செய்யக்கூடும் என தெரிந்ததே. அத்தகைய குற்றத்தைப் புரிவதற்கான ஒரு திட்டமிருப்பதை ஏதாவதொரு செயல் அல்லது செய்வன செய்யாமையால், அல்லது ரகசியக் குறியீடு அல்லது ஏதாவதொரு பிற தகவலை மறைக்கும் உபகரணத்தைப் பயன்படுத்துவதால் தன்னிச்சையாக மறைத்தால் அல்லது அத்தகைய திட்டத்தின் பொருட்டு பொய்யானது என அவருக்கு தெரிந்தே, ஏதாவதொரு வெளிப்படுதலைச் செய்தால், குற்றம் புரியப்பட்டால்:- அக்குற்றம் புரியப்பட்டால், அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ள ஏதாவதொரு வகையிலான, அந்த சிறைத்தண்டனையின் மிக நீண்ட கால அளவில் ஒரு பாதியளவிற்கு நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலஅளவிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ளவாறான அத்தகைய அபாரதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்; குற்றம் மரணதண்டனை, முதலானவற்றுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால்:- அல்லது, அக்குற்றம் மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய இருந்தால், பத்து வருடங்கள் வரை நீட்டிக்கபடக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன்; குற்றம் புரியப்படாவிட்டால்:- அல்லது அக்குற்றம் புரியப்படாவிட்டால், அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ள அத்தைகைய சிறைத்தண்டனையுடன் மிக நீண்ட கால அளவில் நான்கில் ஒருபகுதி வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ளவாறான அத்தகைய அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டு A என்ற ஒரு காவல்துறை அலுவலர், அவரின் தகவலுக்கு வரலாமென்ற கொள்ளை புரிவதற்கான அனைத்துத் திட்டங்களையும் பற்றிய தகவலைக் கொடுப்பதற்கு சட்டப்படி கடமை கொண்டிருக்கும்போது, மற்றும் கொள்ளையைப் புரிவதற்கு B என்பவரின் திட்டங்களைத் தெரிந்தே.அக்குற்றம் புரிவதற்கு உதவி செய்யும் புரிவதற்கு உதவி செய்யும் உள்நோக்கத்துடன் அத்தைகைய தகவலை அளிக்காமல் விட்டுவிடுகிறார்.இங்கு A ஒரு சட்டவிரோத விட்டுவிடுதலால், B இன் திட்டமிடுதல் இருப்பதை மறைந்திருக்கிறார், மற்றும் இச்சட்டத்தின் ஷரத்துகளின்படி தண்டனைக்குள்ளாகிறார்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 119 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்